Tuesday 7th of May 2024 06:17:06 PM GMT

LANGUAGE - TAMIL
.
அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒன்ராறியோவில் ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடு மாகாணம் முழுவதும் அமுல்!

அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒன்ராறியோவில் ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடு மாகாணம் முழுவதும் அமுல்!


கனடா ஒன்ராறியோவில் உள்ளக மற்றும் திறந்த வெளிகளில் ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள் மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஒன்றுகூடல்களைத் தடுக்கும் முயற்சியாக ஒன்ராறியோ மாகாணத்தில் அனைத்துப் பிராந்தியங்களிலும் மூடப்பட்ட உள்ளகப் பகுதிகளில் 10 பேரும் திறந்த வெளியில் 25 பேருக்கும் மேல் ஒன்று கூட தடை விதிக்கப்படும் என ஒன்ராறியோ முதல்வா் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகள் அடுத்த 28 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

உணவகங்கள், திரை அரங்குகள் மற்றும் விருந்து மண்டபங்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வா்த்தக ரீதியிலாக அமைப்புக்களுக்கு மூடப்பட்ட உள்ளகப் பகுதிகளில் 50 போ், திறந்த வெளியில் 100 போ் என்ற நடைமுறை தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் என மாகாண அரசு தெரிவித்துள்ளது.

ரொராண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் ஒட்டாவா பகுதிகளில் மூடப்பட்ட இடங்களில் 10 பேர், திறந்த வெளியில் 25 பேருக்கு மேல் ஒன்றுகூட இந்த வார ஆர்ம்பத்தில் ஒன்ராறியோ தடை விதித்தது.

மாகாணத்தில் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஒன்ராறியோவின் இணை தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பார்பரா யாஃப் கூறினார்.

முடிந்தவரை தொற்று நோய் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம் எனவும் அவா் தெரிவித்தார்

ஒன்ராறியோவில் நேற்று சனிக்கிழமையும் 407 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். நேற்று இரண்டாவது நாளாகவும் தொற்று நோயாளர் தொகை 400-ஐக் கடந்து பதிவானது.

இரண்டு வாரங்களுக்கு முன் ஒன்ராறியோவில் தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 80 ஆக பதிவானது. ஒரு வாரத்துக்கு முன் இது 200 ஆக இருந்தது. இப்போது தினசரி தொற்று நோயாளர் எண்ணிக்கை 400-ஆக அதிகரித்துள்ளது.

இது அனைவருக்குமான அபாய எச்சரிக்கை என நேற்று சனிக்கிமை குயின்ஸ் பார்க்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் கூறினார்.

இதேவேளை, ஒன்ராறியோவில் நேற்று சகிக்கிழமை வரையான கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 39,000 கொரோனா தொற்று சோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.

அடுத்த மாதத்திற்கு நாளொன்றுக்கு 50,000 என்ற அடிப்படையில் சோதனைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவா் கூறினார்.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE